உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தி கைதான 3 வாலிபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-08-10 10:36 GMT   |   Update On 2022-08-10 10:36 GMT
  • தலா 50 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளில் மொத்தம் 7500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
  • ரேஷன் அரிசிகளை அரைத்து குருணையாக்க ஏற்றி வந்ததும், மூட்டைகளுக்கான முறையான ரசீது ஏதும் இல்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்தது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம் சுவாமிமலை காவல் சரகம் கொட்டையூர் ரவுண்டானா அருகில் நேற்று இரவு சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் தலைமை ்காவலர்கள் சரவணன், சங்கர் மற்றும் மணிகண்டன்ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டபோது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளில் மொத்தம் 7500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் லாரி திருவையாற்றிலிருந்து கும்பகோணம் நோக்கி ரேஷன் அரிசிகளை அரைத்து குருணையாக்க ஏற்றி வந்ததும், மூட்டைகளுக்கான முறையான ரசீது ஏதும் இல்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து லாரியை ஓட்டிவந்த ஓட்டுனர் கொத்தங்குடி கீழத்தெரு ஆனந்தராஜ் மகன் வீரமணி (20) மற்றும் உடன் வந்த கும்பகோணம் மேலக்காவேரி பெருமாண்டி தெரு வீரமுத்து மகன் மகேஸ்வரன் (20) மற்றும் தேவனாஞ்சேரி மேலதெரு சண்முகம் மகன் விவேக் (20) ஆகியோரை கைது செய்து தஞ்சாவூர்உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வசம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News