உள்ளூர் செய்திகள்

அரூர் பருத்தி சொசைட்டியில் முறைகேடு புகார்: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்- எஸ்.ஐ.யை தாக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2022-06-28 09:35 GMT
  • 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள 3 ரோடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பருத்தி சொசைட்டியில் அரூர், ஊத்தங்கரை, செங்கம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்முடி, தர்மபுரி, கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் விளைந்த பருத்தி பஞ்சுகளை மூட்டைகளில் கொண்டு வருவது வழக்கம். அப்படி விவசாயிகள் கொண்டுவரும் பருத்தி மூட்டைகளை தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக ஏலம் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகளின் எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், மூட்டைக்கு 10 கிலோ எடையை குறைத்து எடுத்துக்கொள்வதாகவும், இதை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக வும் கூறப்படுகிறது.

இதற்கு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள 3 ரோடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரை தாக்க முயன்றனர். பிற போலீசார் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம்-சென்னை-திருவண்ணாமலை-பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

Similar News