உள்ளூர் செய்திகள்

கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காட்சி.

தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பயனாளிகளுக்கு ரூ.83.39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

Update: 2022-08-15 08:47 GMT
  • தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
  • பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து வீர,தீர செயல்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சப்-கலெக்டர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News