உள்ளூர் செய்திகள்

தேக்கம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

ஆண்டிபட்டி அருகே வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2022-07-02 03:54 GMT
  • கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.சுப்புலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் அரசு இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களிடமிருந்து நேரடியாக மற்றும் அரசு இணையதளத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரை அறிவுறுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளித்திட வருகை தந்த பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, பள்ளி வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சமையலறையினை சுத்தமா கவும், சுகாதாரமாகவும் வைத்திட சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் எம்.சுப்புலாபு ரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News