உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்தவர்களை படத்தில் காணலாம்.

5 வயது பெண் குழந்தைக்கு சிகிச்சை சரியில்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-09-27 07:26 GMT   |   Update On 2022-09-27 07:26 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • சரி இல்லாத சிகிச்சை செய்ததால் தான் இதற்கு காரணம்

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளியனூர் காமராஜர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 32) இவருக்கு சஞ்சனா என்ற 5-வயது மகள் உள்ளார். இந்நிலையில் சஞ்சனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சுகுமார் சஞ்சனாவை தைலாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சஞ்சனாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து சுகுமார் என் மகள் சஞ்சனாவுக்கு தைலாபுரம் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் கணேஷ் என்பவர் சரி இல்லாத சிகிச்சை செய்ததால் தான் இதற்கு காரணம் என்று கூறி கிளியனூர் போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட கிளியனூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் தைலாபுரம் நான்கு வழி சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டகுப்பம் டிஎஸ்பி மித்ரன் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News