உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

அருந்ததியர் குடியிருப்பு பகுதி மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

Published On 2022-07-02 14:47 GMT   |   Update On 2022-07-02 15:43 GMT
  • சிலுவாம்பட்டி ஊராட்சியில் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு.
  • நரிக்குறவ இன மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மை குட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி உரை ஆற்றுகிறார். இதை பங்கேற்பதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலுவாம்பட்டி ஊராட்சியில்உள்ள அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். 


அங்குள்ள நரிக்குறவ இன மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். 3.5 சதவீத அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கவினுடன் முதலமைச்சர் கலந்தரையாடினார்.

மேலும் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அதன்பிறகு அவர்களது வீட்டில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார்.

Tags:    

Similar News