உள்ளூர் செய்திகள்

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சீத்தா பழங்களை படத்தில் காணலாம்.

அய்யலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் சீத்தாபழங்கள்

Published On 2022-08-09 07:28 GMT   |   Update On 2022-08-09 07:28 GMT
  • மருத்துவ குணம் கொண்ட சீனி கொய்யா எனப்படும் இந்த பழங்கள் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தாக உள்ளது.
  • அறுவடை செய்யப்பட்டுள்ள பழங்கள் கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், மணக்காட்டூர் செந்துறை, பஞ்சம்தாங்கி, மலையூர் பகுதிகளில் அதிகமாக மலைபிரதேசங்களில் ஆண்டுக்கு ஒரு முறை விளைச்சல் தரக்கூடிய சீதாப்பழம் விளைவிக்கப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட சீனி கொய்யா எனப்படும் இந்த பழங்கள் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தாக உள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இந்த பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பழம் தற்பொழுது அதிகளவு வரத்து வரும் என்பதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு குறைந்த விளைச்சல் காணப்பட்டுள்ளது. இதனால் 22 கிலோ கொண்ட பெட்டி ரூ.600 முதல் ரூ.750 வரை பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிகாலை முதலே விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர்.

கிலோ ரூ.30 முதல் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைகின்றனர் வழக்கத்தை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவால் மலை கிராமத்தினர் வேதனை அடைந்தனர்.

தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள பழங்கள் கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags:    

Similar News