உள்ளூர் செய்திகள்

சிறைபிடித்த லாரியை படத்தில் காணலாம்.

செங்கல்சூளைக்கு மணல் கடத்திய லாரி சிறைபிடிப்பு

Published On 2022-08-09 07:56 GMT   |   Update On 2022-08-09 07:56 GMT
  • கரிவாடன் செட்டியபட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
  • மணல் அள்ளிய லாரி மீது வழக்குபதிவு செய்யாததால் பொதுமக்கள் போலீசார் மீது அதிருப்தி அடைந்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கரிவாடன் செட்டியபட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் மணல் அள்ளிச் சென்ற லாரியை திடீரென்று பொதுமக்கள் கூட்டமாக சென்று சிறை பிடித்தனர்.

இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதை அறிந்து 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர்.

வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மணல் அள்ளுவது சட்டப்படி குற்றம் என்று எடுத்து கூறி எச்சரித்தனர்.

இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் கலைந்து சென்றனர். மணல் அள்ளிய லாரி மீது வழக்குபதிவு செய்யாததால் பொதுமக்கள் போலீசார் மீது அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

Similar News