உள்ளூர் செய்திகள்

தருமபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த நகராட்சி தலைவர் - ஆணையர்

Published On 2022-06-26 08:43 GMT   |   Update On 2022-06-26 08:43 GMT
  • தருமபுரி அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு நடத்தப்பட்டது.
  • நகர்மன்ற தலைவரும், ஆணையரும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

தருமபுரி,

தருமபுரி நகராட்சியில் உள்ள, 28, 29 ஆகிய வார்டுகளில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் லட்சுமி மாது தலைமை வகித்தார். கமிஷ்னர் சித்ரா முன்னிலை வகித்தார்.

இதில் 'எனது குப்பை, எனது பொறுப்பு', என்பதை வலியுறுத்தி தருமபுரி நகராட்சி நிர்வாகம், மை தர்மபுரி தொண்டு நிறுவனம் சார்பாக, இப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டில் உண்டாகும் குப்பைகளை எளிதில் தரம் பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தருமபுரி டவுன் பஸ்ஸ்டாண்டில் உள்ள அம்மா உணவகம் ஆய்வு செய்யப்பட்டதுடன், அதன் அருகே உள்ள சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்கவும், தர்மபுரியின் அடையாளமான அதியமான், அவ்வையார் ஓவியம், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மஞ்சள் பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்பு ஓவியம், செல்பி ஓவியம் வரையும் பணியை பார்வையிட்டனர். மேலும், பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்ள்ளியில் மாணவர்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து பயிற்சியும், இதை பெற்றோர்களிடம் கொண்டு செல்ல மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள குமரபுரி காலனியில் குப்பைகளை பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், கவுன்சிலர்கள் சம்பந்தம், செந்தில்வேல், மாதேஸ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News