உள்ளூர் செய்திகள்

சித்தா கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும், மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்படுவதையும் படத்தில் காணலாம்.

நெல்லையில் சித்தா கல்லூரி டாக்டர், 5 மாணவ-மாணவிகள் உள்பட 52 பேருக்கு கொரோனா

Update: 2022-06-30 09:43 GMT
  • கடந்த 3 நாட்களுக்கு முன்பு உள்நோயாளியாக வந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது.
  • பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 90 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

50-ஐ தாண்டியது

இந்நிலையில் இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மாநகர பகுதியில் மட்டும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாளை சித்தா மருத்துவகல்லூரியை சேர்ந்த டாக்டர் ஒருவர், ஒரு மாணவர், 3 மாணவிகள் மற்றும் நோயாளி ஒருவர் அடங்குவார்கள்.

மேலும் 90 பேருக்கு பரிசோதனை

சித்தா கல்லூரியில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் ஊழியர்கள் அங்கு கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து சித்தமருத்துவ கல்லூரி டீன் சாந்த மரியா கூறியதாவது:-

கடந்த 3 நாட்களுக்கு முன்பு உள்நோயாளியாக வந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவருடன் வார்டில் இருந்தவர்கள் என 58 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு டாக்டர், முதுநிலை மருத்துவ மாணவ-மாணவிகள் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 90 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கல்லூரியில் அனைத்து மாணவ-மாணவிகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு செல்லுமாறு அறிவுத்திப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News