உள்ளூர் செய்திகள்

சுரங்கத்தில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வேனில் ஏற்றிய காட்சி.

திண்டுக்கல் அருகே கடையில் சுரங்கம் அமைத்து பதுக்கிய 340 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-06-28 05:48 GMT   |   Update On 2022-06-28 05:48 GMT
  • செம்பட்டியில் பல்வேறு மளிகை கடைகளில் கடந்த சில நாட்களாக குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.
  • மளிகை கடைக்குள் சுரங்கம் அமைத்து குட்கா பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் பல்வேறு மளிகை கடைகளில் கடந்த சில நாட்களாக குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து செம்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராமன் தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி. பாஸ்கரன் மற்றும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கடைக்குள் சுரங்கம் அமைத்து அந்த சுரங்கத்திற்குள் பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 340 கிலோ குட்கா பறிமுதல் செய்ததோடு அந்த கடையின் உரிமையாளர் சரவணன் (வயது 46) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகை கடைக்குள் சுரங்கம் அமைத்து குட்கா பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News