உள்ளூர் செய்திகள்

விநாயர் சிலைக்கும் வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள்.

திண்டுக்கல்லில் சிவசேனா சார்பில் 300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தயார்

Published On 2022-08-18 07:19 GMT   |   Update On 2022-08-18 07:19 GMT
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.
  • மாவட்டம் முழுவதும் இந்த அமைப்பினர் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல்:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்ைட செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொது இடங்களில் சிலைகள் வைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அரசு வழிகாட்டுதலின்படி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வக்கம்பட்டியில் சிவசேனா சார்பில் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இந்த அமைப்பினர் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளது.

இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தேங்காய் நார், பேப்பர்கூல், கிழங்குமாவு மூலம் தயார் செய்யப்படுகிறது. வீட்டில் வைத்து வழிபட ஒரு அடி சிலைகளும், பொதுஇடங்களில் வைக்க 2 முதல் 9 அடி உயர சிலைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சிலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி எந்தெந்த இடங்களில் வைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பிற்கு பிறகு அங்கு வைக்கப்படும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News