உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்

Published On 2022-05-24 09:31 GMT   |   Update On 2022-05-24 09:31 GMT
சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசி, விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்சி அருணாச்சல மன்றத்தில் இளைஞர்  காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ் சந்திரன், ராகுல் காந்தி,  ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  

மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் சிவா, காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு ஜி.எம்.ஜி.மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கீரைக்கொல்லை சக்கரபாணி, மலைக்கோட்டை முரளி, பீமநகர் காசிம், மணிவேல், ஹெலன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தின்போது சீமானின் உருவப்படத்தை இளைஞர் காங்கிரசார் செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

போராட்டத்திற்கு பின்னர் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், தலைவர் ராஜீவ் காந்தி தியாகியா என்று சீமான் கேட்டிருக்கிறார். இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ் தியாகி தான். நீங்கள் என்ன தியாகம் செய்து இருக்கிறீர்கள். 

இலங்கை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் நாவை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து இவ்வாறாக அவதூறு பேசினால் தமிழகத்தில் எங்கும் அவரை நடமாட விட மாட்டோம். காங்கிரஸில் இருப்பவர்கள் காந்தியவாதிகள் என்று சீமான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த காங்கிரஸ் கட்சியில் தான் நேதாஜியும் இருந்தார் என்பதை சீமான் மறந்துவிடக் கூடாது.  சீமான் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News