உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-05-24 08:56 GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 மாணவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் 40 மாணவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. நோய் தொற்று பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 6 மாணவிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 2 மாணவிகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர் மற்றும் நெருக்கமானவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 மாணவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் 40 மாணவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News