உள்ளூர் செய்திகள்
ஆட்டோ மீது வேன் மோதி நிற்கும் காட்சி

பெரியகுளம் அருகே ஆட்டோமீது வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2022-05-23 05:20 GMT
பெரியகுளம் அருகே ஆட்டோமீது வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி(29). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று இரவு வத்தலக்குண்டுவில் இருந்து தேவதானப்பட்டி நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த வேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த வெள்ளைப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார். வேனை ஓட்டிவந்த அரவிந்த்(40) என்பவர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News