உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி.

தேனி மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி

Published On 2022-05-23 05:15 GMT   |   Update On 2022-05-23 05:15 GMT
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது
வருசநாடு:

கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வன சரகத்திற்கு உள்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான், செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் மழை அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் மலைப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் குளங்கள் முற்றிலுமாக வற்றியது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வனவிலங்குளின் தாகத்தை தீர்க்கும் வகையில் கண்டமனூர் வனசரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வனவிலங்குகள் தண்ணீர் தொட்டிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தொட்டியை சுற்றி ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றும் வனசரகர் ஆறுமுகம் வனத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Tags:    

Similar News