உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

சட்டவிரோதமாக மது விற்பனை- இடுவாய் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்

Published On 2022-05-22 11:00 GMT   |   Update On 2022-05-22 11:00 GMT
இந்த டாஸ்மாக் கடையில் தினமும் காலை 6 மணி முதலே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறி, பா.ஜனதா கட்சியினர் இன்று காலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட இடுவாய் பஸ்நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த டாஸ்மாக் கடையில் தினமும் காலை 6 மணி முதலே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறி, பா.ஜனதா கட்சியினர் இன்று காலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சி.பி.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு நிருபர்களிடம் கூறுகையில்"

இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக்கடை திறப்பதற்கு முன்பாகவே தினமும் காலை 6 மணி முதலே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது.சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இடுவாய் டாஸ்மாக் கடை இடுவாய் பகுதி குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News