உள்ளூர் செய்திகள்
அரூரில் காமாட்சியம்மனுக்கு முப்பெரும் விழா நடைபெற்றது.

அரூரில் காமாட்சியம்மனுக்கு முப்பெரும் விழா

Published On 2022-05-22 09:58 GMT   |   Update On 2022-05-22 09:58 GMT
அரூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவை ஒட்டி காமாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற்றனர்.
அரூர்,

அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில் காமாட்சி யம்மன், கோட்டை காளியம்மன், உள்ளூர் மாரியம்மன் ஆகிய கோயில்களில் முப்பெரும் விழா நடைபெற்றது. 
கடந்த 16-ந் தேதி முதல் துவங்கிய விழாவின் முதல் நாளில் கணபதி ஹோமம், கொடியேற்றம், கங்கனம் கட்டுதல் ஆகியவை நடைபெற்றது. 

2-ம்நாள் கடைவீதியிலி ருந்து வானவேடிக்கை தாரை தப்பட்டையுடன் உள்ளூர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், 3-ம்  நாள் உள்ளூர் மாரி யம்மன், மேட்டுப்பட்டி மாரியம்மன், கோட்டை காளியம்மன் ஆகிய சுவாமிகளை அலங்காரம் செய்து காமாட்சியம்மன் தோப்பில் மாவிளக்கு ஊர்வலமும், மறுநாள் 108 தீப்பந்தங்களுடன் சுவாமிகள் பூமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூமிதித்தனர். 

வெள்ளிக்கிழமை கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தலும், 108 சங்காபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. 

நேற்று 21.05.2020 காலை 11 மணியளவில் காமாட்சியம்மன் திருக்கல்யாணமும் இரவு பிரமாண்ட காமாட்சி யம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.  விழாவிற்கான ஏற்பாடு களை தலைவர் தனபால், செயலாளர் கதிரேசன். பொருளாளர் சண்முகம் தர்மகர்த்தாக்கள் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News