உள்ளூர் செய்திகள்
அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணி- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-05-22 09:57 GMT   |   Update On 2022-05-22 09:57 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடத்தூர்,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நெடுஞ்சாலை துறையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி உட் கோட்டத்திற்கு உட்பட்ட மல்லாபுரம் கோபிநாதம்பட்டி சாலையில் 3.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 180 லட்சம் மதிப்பில் சாலை பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. 

இப்பணிகளை அரசின் உத்தரவுப்படி சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News