உள்ளூர் செய்திகள்
விபத்து

திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- விவசாயி பலி

Update: 2022-05-22 09:00 GMT
திருத்தணி அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

திருத்தணியை அடுத்த மாம்பாக்க சத்திரம் காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் மகன் சங்கர் (வயது 40). விவசாயி.

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை சம்பந்தமாக சங்கர் திருத்தணி பைபாஸ் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் மாம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த சுக்கீரன் (26), கஜேந்திரன் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். சுக்கீரன், கஜேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News