உள்ளூர் செய்திகள்
.

வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கம் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

Update: 2022-05-22 08:59 GMT
நாமக்கல் புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நாமக்கல்:

புதுச்சத்திரம் வட்டாரத்தில் நாளை காலை 10 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இத்திட்ட தொடக்க நிகழ்ச்சி ஏழூர், கதிரா நல்லூர் மற்றும் திருமலை பட்டி கிராமங்களில் காணொலி மூலம் காட்சி படுத்த உள்ளன. எனவே விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாரணி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News