உள்ளூர் செய்திகள்
கோவிலில் பரதநாட்டியம் நடைபெற்ற காட்சி.

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி

Published On 2022-05-22 08:57 GMT   |   Update On 2022-05-22 08:57 GMT
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டை:

செங்கோட்டையில் பிரசித்திபெற்ற கோவிலான நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் நடைபெற்று வரும் கொடை விழாவின் 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் தீபாராதனையும் நடைபெற்றது.

மாலையில் மீனாட்சி அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு சிறப்பு நிகழ்ச்சியாக நித்தியா பரதாலயா குழுவினரின் சார்பில் சரவணன், பாரதி, புவனேஸ்வரி, ஜெயஸ்ரீ, மகாலெட்சுமி, அபிஸ்ரீ, கோபிகா, ரம்யா ஆகியோரின் சிறப்பு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கண்டுகளித்தனர்.

முன்னதாக கோவில் விழாக்குழு தலைவரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளருமான செங்கோட்டை முத்துசாமி தலைமையில் பரதநாட்டிய குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கபட்டது.

பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று சென்றனர்.

Tags:    

Similar News