உள்ளூர் செய்திகள்
புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த காட்சி.

உடன்குடி சியோன்நகர் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

Published On 2022-05-21 10:50 GMT   |   Update On 2022-05-21 10:50 GMT
உடன்குடி அருகே சீயோன் நகர் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் புதிய சீர்மிகு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
உடன்குடி:

உடன்குடி அருகே சீயோன் நகர் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் புதிய சீர்மிகு வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. 

இப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறன், கணினி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்  பாலசிங் தலைமை தாங்கினார். சேகரத்தலைவர் ஜெபக்குமார்ஜாலி முன்னிலை வகித்தார். நெல்லை  திருமண்டல முன்னாள் பேராயர் கிறிஸ்துதாஸ் ஜெபம் செய்தார்.

தி.மு.க.வை சேர்ந்தமாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப், துணைத்தலைவர் மால்ராஜேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், சபை ஊழியர் சாம், ஆலய ஆசனக்குழு நிர்வாகிகள் ஞானராஜ், கோயில்ராஜ்யோவான், கிறிஸ்டோபர், ஆல்பாஸ், சீயோன் நகர் ஆலய பரிபாலனக் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 பள்ளி தலைமையாசிரியை அன்னமரியாள் நன்றி கூறினார்.
Tags:    

Similar News