உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சாத்தான்குளம் தாலுகாவில் 25-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்

Published On 2022-05-21 10:44 GMT   |   Update On 2022-05-21 10:44 GMT
சாத்தான்குளம் தாலுகாவில் 1431-ல் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தாலுகாவில் 1431-ல் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் காலை 10 மணி முதல் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

முதல் நாள் 25 -ந் தேதி அன்று ‌  வெங்கடேஸ்வரபுரம் உள்வட்டம் மீரான் குளம் பகுதி-1 பகுதி 2 ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், கருங்கடல், கட்டாரி மங்கலம், பழங்குளம் ஆகிய கிராமங்களுக்கும் இரண்டாம் நாளான 26-ந் தேதியன்று பிடானேரி,  எழுவரைமுக்கி, சாத்தா ன்குளம், உள்வட்டம், பன்னம் பாறை, சாத்தான்குளம் , செட்டியிருப்பு, புதுக்குளம் ஆகிய கிராமங்களிலும்,

 மூன்றாம் நாளன்று 27-ந் தேதி சாத்தான்குளம் உள்வட்டம் நெடுங்குளம் கோமானேரி, கொம்பன் குளம், தட்ச மொழி, பள்ளக்குறிச்சி உள்வட்டம் முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவி நல்லூர் ஆகிய கிராமங்களிலும் நான்காம் நாளன்று 31 -ந் தேதி அன்று பள்ளக்குறிச்சி உள்வட்டம், கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி ,அரசூர் பகுதி 1 ,பகுதி 2, திருப்பணிபுதந்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

 இந்த கிராமங்களின் பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். 
இத்தகவலை சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News