உள்ளூர் செய்திகள்
கோவிலில் பதிந்துள்ள அம்மன் பாதத்தை படத்தில் காணலாம்

வாலாஜா அகஸ்தீஸ்வரர் கோவிலில் அம்மன் பாதம் பதிந்ததாக கூறி பக்தர்கள் மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜை

Published On 2022-05-21 10:26 GMT   |   Update On 2022-05-21 10:26 GMT
வாலாஜா அகஸ்தீஸ்வரர் கோவிலில் அம்மன் பாதம் பதிந்ததாக கூறி பக்தர்கள் மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. 

கோவிலில் அர்ச்சகர் மனோஜ் குருக்கள் என்பவர் நேற்று காலை வழக்கம் போல் கோவில் நடையை திறந்து சாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். 

தொடர்ந்து புவனேஸ்வரி அம்மன் சன்னிதியில் விளக்கு ஏற்றுவதற்காக சென்றார். அப்போது கருவறையின் வெளியே பெண்ணின் பாதம் தரையில் படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் பாதம் பதிந்தாக கருதி மெய் சிலிர்த்து போனார். இது குறித்து அருகில் இருந்த பக்தர்களுக்கு தகவல் தெரி வித்தார். அதன் பேரில் அங்கு கூடிய பக்தர்களும் இதை பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர். 

பெண் பக்த ர்கள் தரையில் படிந்த பாதங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களை தூவி கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

கடந்த 12-ந் தேதி அம்மன் கருவறையில் விளக்கில் திரியே போடாமல் எண்ணெய் ஊற்றியவுடன் தானாகவே எரிந்தது. முதல் நாள் எண்ணெய் ஊற்றிய அளவின் குறையாமல் தொடர்ந்து 3 நாட்களாக விளக்கு எரிந்தது பரபரப்பாக பேசப்பட்டது. 

தற்போது கோவிலில் பதிந்துள்ள அம்மன் பாதத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

Tags:    

Similar News