உள்ளூர் செய்திகள்
அதிமுக

அச்சரப்பாக்கம் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Update: 2022-05-21 10:12 GMT
தமிழக அரசு சொத்து வரி உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்து அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் நந்தினி கரிகாலன் தலைமை தாங்கினார்.பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் வி.டி. ஆர். வி. எழில்அரசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மன்ற உறுப்பினர்கள் தேவி பிரியங்கா, ஜெயலட்சுமி சகுந்தலாமணி ஆகிய 4 உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் எதிரே சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழக அரசு சொத்து வரி உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகதாஸ், ஆனந்தன், ராமச்சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News