உள்ளூர் செய்திகள்
சந்தவாசலில் கங்கையம்மன் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா, கரக ஊர்வலம் நடைபெற்றது.

சந்தவாசலில் கங்கையம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2022-05-21 10:10 GMT
சந்தவாசலில் கங்கையம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் கங்கையம்மன் மாரியம்மனுக்கு நேற்று கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது.

இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News