உள்ளூர் செய்திகள்
கேஎஸ் அழகிரி

கொலையாளி விடுதலையை கொண்டாடுவது இதயத்தில் ரத்த கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது- கேஎஸ் அழகிரி

Update: 2022-05-21 08:58 GMT
கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பே எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் 7 பேர் விடுதலையை வலியுறுத்தினார்கள். கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு தானே நாங்களும் கூட்டணி வைத்தோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை. கொலையாளி விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவது இதயத்தில் ரத்த கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News