உள்ளூர் செய்திகள்
தமிழக அரசு

வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியிடப்பட்டது

Published On 2022-05-20 09:47 GMT   |   Update On 2022-05-20 09:47 GMT
ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.182 கோடி ஒதுக்கி உள்ளது.
சென்னை:

பருவ மழையால் சென்னை மற்றும் பிற நகரில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், வரதராஜபுரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர். இந்த ஆய்வறிக்கையை தமிழக அரசிடமும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.182 கோடி ஒதுக்கி உள்ளது.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News