உள்ளூர் செய்திகள்
இளங்காளியம்மன் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நடை பெற்ற போது எடுத்த படம்.

இளங்காளியம்மன் கோவிலில் தேரோட்டம்

Published On 2022-05-20 09:20 GMT   |   Update On 2022-05-20 09:20 GMT
மண்ணச்சநல்லூர் கரியமாணிக்கம் இளங்காளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடை பெற்றது.
திருச்சி:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள 94.கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

15-ந் தேதியன்று இரவு 8 மணிக்கு மறு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து சாம பூஜையும் நடைபெற்றது. 17-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பூந்தேரில் அம்மன் எல்லை மறித்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெற்றது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் தேரில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  

தேரோடும் வீதி வழியாகதேர் வலம் வந்து நிலையை அடைந்தது.  விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News