உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

அயோத்தி தாசர் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Update: 2022-05-20 08:16 GMT
அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:

திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்தி தாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம்!

அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News