உள்ளூர் செய்திகள்
நிகத் சரீன்- முக ஸ்டாலின்

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

Update: 2022-05-20 06:22 GMT
நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான நிகத் சரீனின் வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடரமிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளப்பதிவில் கூறி இருப்பதாவது:

பெண்களுக்கான உலகக்குத்துச் சண்டை தொடரில் அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர்.நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடரமிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News