உள்ளூர் செய்திகள்
மாயம்

தியாகதுருகம் அருகே ஜவுளி கடைக்கு சென்ற பெண் மாயம்

Update: 2022-05-19 10:20 GMT
தியாகதுருகம் அருகே ஜவுளி கடைக்கு சென்ற பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் சென்னையில் தனது மனைவி சுதாவுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி சுதா கர்ப்பம் அடைந்தார். இதனால் அவரை வடதொரசலூரில் உள்ள சுதாவின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஜவுளி கடைக்கு துணி வாங்க போவதாக சென்ற சுதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுதாவின் குடும்பத்தினர் செல்வதற்கு தகவல் கொடுத்தனர். அவர் மனைவியை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News