உள்ளூர் செய்திகள்
போட்டியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

குற்றாலத்தில் தற்காப்பு கலை பட்டய தகுதி போட்டி

Update: 2022-05-19 06:45 GMT
குற்றாலத்தில் தற்காப்பு கலை பட்டய தகுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காப்பு கலை பயிற்சியை நடத்தி வரும் இண்டோஷாவலின் இண்டா் நேஷனல் கராத்தே, குங்பூ பயிற்சி நிறுவனம் சார்பில் 1-ம் வகுப்பு முதல் கல்லுாரி வரையில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு தரமான பயிற்சி அளித்து பல்வேறு போட்டிகள் நடத்தி தற்காப்பு கலையின் அவசியத்தை உணா்த்தி வருகிறது.

இந்த பயிற்சியகம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வாழ்த்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான பட்டய தகுதி போட்டி  குற்றாலம் இந்து நகரிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

போட்டிக்கு மாநிலத் தலைவா் ராம்ராஜ் தலைமை தாங்கினார். தலைமை பயிற்சியாளா்கள் பிரகாஷ், வீரபாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனா். பயிற்சியாளா் சிவநாதன் வரவேற்று பேசினார்.  அதனைதொடா்ந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கான பட்டய போட்டி மற்றும் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் தேர்வு பெற்றனா். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினா். முடிவில் பயிற்சியாளா் அருண் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி நிறுவன பயிற்சியாளா் பொன்இசக்கி மற்றும் பயிற்சியாளா்கள் செய்திருந்தனா்.
Tags:    

Similar News