உள்ளூர் செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்

போலீஸ் நிலையத்தில் போதை வாலிபர் ரகளை

Published On 2022-05-19 05:46 GMT   |   Update On 2022-05-19 05:46 GMT
வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி போதை வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் மதுபோதையில் வந்தார். அங்கிருந்த போலீசாரிடம் தனது மனைவி 10 நாட்களுக்கு முன்னர் மாயமாகி விட்டார். இன்று மாலைக்குள் கண்டு பிடித்துத்தரவேண்டும். இல்லையென்றால் போலீசார் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சமாதானம் செய்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குமார் என்பதும், கட்டிட தொழிலாளியான இவர் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

குமார் தொடர்ந்து மது குடித்ததால் அவரது மனைவி கோவித்து சென்றுவிட்டார். இதனால் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் சுற்றித்திரிந்துள்ளார். திடீரென போலீஸ் நிலையத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போதை தெளிந்த பிறகு அந்த ஆசாமி அங்கிருந்து புகார் அளிக்காமல் சென்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்தார். அதில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொல்ல முயல்வதாக கூறி கதறினார். இதனை நம்பி போலீசார் சம்பவ இடத்திற்கு பதறியடித்து சென்றனர்.

ஆனால் அங்கு அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு கால்மேல் கால்போட்டு ஜாலியாக இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என கண்டிப்பாக எச்சரித்தனர்.

இந்த நிலையில் தற்போது போலீஸ் நிலையத்தில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளால் வேலைபழு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் தங்களது நேரம் வீணடிக்கப்படுவதாக போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News