உள்ளூர் செய்திகள்
பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

கொடைக்கானல் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-05-19 05:35 GMT   |   Update On 2022-05-19 05:35 GMT
கொடைக்கானல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்
கொடைக்கானல்:

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

இந்நிலையில் நேற்று அவ்வப்போது மழை பெய்துவந்த போதும் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் ஆண்களும் பெண்களுமாக பறவைக்காவடி, அலகுகுத்தி வேல் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

கொடைக்கானல் நகரின் பலபகுதிகளிலிருந்தும் முளைப்பாரி எடுத்து மாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் டிப்போ காளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் முளைப்பாரியை கரைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News