உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

Update: 2022-05-19 05:17 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,976-க்கு விற்பனையாகிறது
சென்னை:

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.38,112 ஆக இருந்தது. அது நேற்று ரூ.37,912 ஆக குறைந்தது. இந்த நிலையில் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.64 அதிகரித்தது. ரூ.37,976 ஆக விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4739-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.4,747-க்கு விற்கப்படுகிறது.

அதேநேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.65.10க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65,100க்கு விற்கப்படுகிறது.
Tags:    

Similar News