உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

Published On 2022-05-18 12:27 GMT   |   Update On 2022-05-18 12:27 GMT
தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் கூறினார்.
சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாறன் மற்றும் அவரது தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் பேரறிவாளன் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை முதல்வருடன் பகிர்ந்துகொண்டனர்.
Tags:    

Similar News