உள்ளூர் செய்திகள்
.

ஏ.டி.எம் மிஷினை உடைத்து பணம் திருட முயன்றவர் கைது

Update: 2022-05-18 09:44 GMT
மேச்சேரியில் ஏ.டி.எம் மிஷினை உடைத்து பணம் திருட முயன்றவர் கைது
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏடிஎம் மிஷினை மர்ம நபர் உடைத்து பணம் திருட முயற்சி செய்தார்.  அப்பொழுது இந்த மிஷினில் இருந்து அலாரம் சத்தம் அடித்தவுடன் அந்த மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை வைத்து  விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மேச்சேரி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அந்த நபர்  ஒரு பையில் இரும்புராடு, இரும்பு  சுத்தியல் ஆகியவை வைத்திருந்தார்.

 அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரிக்கையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உதய பிரகாஷ் (வயது  23) என்பதும்  சம்பவத்தன்று இவர்  மிஷினை ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும்  தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதய பிரகாஷை கைது செய்தனர்.
Tags:    

Similar News