உள்ளூர் செய்திகள்
.

தேன்கனிக்கோட்டையில் ஆவின் பால் பாக்கெட்டில் விலை குளறுபடியால் பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2022-05-17 10:41 GMT   |   Update On 2022-05-17 10:41 GMT
தேன்கனிக்கோட்டையில் ஆவின் பால் பாக்கெட்டில் விலை குளறுபடியால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ஆவின் விற்பனை கடை உள்ளது. இந்த கடையில் உள்ள பால் பாக்கெட்டுகளில் பக்கெட்டில் முன்பக்கம் ஒரு விலையும், பின்பக்கம் ஒரு விலையும், அச்சடிக்கப்பட்டு இருந்தது.

இதனால் பால் வாங்க வந்த பொதுமக்கள் கடைக்காரர்க ளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் அரை லிட்டர் கவரில் முன்பக்கத்தில் 11.50 ரூபாயும், அதே கவரில் பின்பக்கத்தில் அரை லிட்டர் 22 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்தது.

இன்று காலை பால் வாங்க வந்த பொதுமக்கள் அதைப் பார்த்து குழப்பம் அடைந்து கவரில் உள்ள 11.50  ரூபாய் தான் தருகிறோம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவின்பால் நிர்வாகத்தால் இந்த குளறுபடியால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். இதுபோன்ற தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News