உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கி பணத்தை பறிக்க முயன்ற வாலிபர் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

Published On 2022-05-17 09:43 GMT   |   Update On 2022-05-17 09:43 GMT
வாலிபர் ஒருவர் திடீரென கண்டக்டரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
திருப்பூர்:

திருப்பூரில் இருந்து உடுமலைக்கு செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியம் (40). இவர் சம்பவத்தன்று இரவு யுனிவர்சல் தியேட்டர் அருகே உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் திடீரென கண்டக்டரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். 
இதனைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பணப்பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் வயது (20) என்பதும் திருப்பூர் பி.என்.ரோடில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News