உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி கர்ப்பம்

Update: 2022-05-17 09:25 GMT
குடவாசல் அருகே பாலியல் தொல்லை கொடுத்து 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவரது உறவினர் திருமாவளவன் வலுக்கட்டாயமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். 

இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதையடுத்து சிறுமியை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுகுறித்து அவரது தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருமாவளவனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News