உள்ளூர் செய்திகள்
குடிநீர் குழாய்களில் உள்ள டேப்கள் திருடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

குடிநீர் குழாய்கள் திருட்டு

Update: 2022-05-17 08:41 GMT
குமாரபாளையத்தில் குடிநீர் குழாய்கள் திருட்டு பொதுமக்கள் அவதி
குமாரபாளையம்:

குமாரபாளையம் வேதாந்தபுரம், குள்ளங்காடு பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் திருடப்பட்டதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர். 

அப்பகுதி மக்கள் காலையில் வேதாந்தபுரம், குள்ளங்காடு பகுதிகளில் குடிநீர் பிடிக்க வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்த போது, குழாயின் பெண்டு பகுதி, டேப்கள் ஆகியவை சுமார் 30 வீடுகளுக்கும் மேல் திருடப்பட்டிருந்தது. 

இதனை கண்டு அதிர்ச்சியுற்றோம். பல பகுதிகளில் இது போல் திருட்டு நடந்துள்ளது. இது போன்ற நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இதுபற்றி குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
Tags:    

Similar News