உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-05-17 07:08 GMT
சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
பல்லடம்:

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;  பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த சிறுமியை அந்தப் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, சிறுமியை துன்புறுத்திய கார்த்திகேயன் ( வயது 41) என்பவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News