உள்ளூர் செய்திகள்
ஜி.கே.வாசன்

ஜவுளி தொழிலில் ரூ.100 கோடி பாதிப்பு: வேலை நிறுத்தம் தவிர்க்க சிறப்பு திட்டம் வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-05-17 06:53 GMT   |   Update On 2022-05-17 06:53 GMT
ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலையைக் குறைக்க, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்க சலுகைகளை வழங்கவும், சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் முக்கியத் தொழிலான ஜவுளித்தொழிலைப் பாதுகாக்க பருத்தி ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டு வரவேண்டும், செயற்கையாகப் பருத்தியை பதுக்கி வைக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால் திருப்பூரில் மட்டுமே சுமார் 360 கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்படும் நிலை உருவாகும் என தெரிவிக்கின்றனர்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஜவுளித்துறையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

நாளுக்கு நாள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலையைக் குறைக்க, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்க சலுகைகளை வழங்கவும், சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News