உள்ளூர் செய்திகள்
பட்டம் வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின்

பட்டமளிப்பு விழாவில் கால் கடுக்க நின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-05-16 12:51 GMT   |   Update On 2022-05-16 12:51 GMT
வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞரும் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை தீட்டிவருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்ட மளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், எனது ஆட்சிக்காலத்தை உயர் கல்வியின் பொற்காலமாக மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறோம் என தெரிவித்தார்.



பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மிகவும் பழமையான மொழி. சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்பவேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன் என்றார்.

இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவந்த 931 மாணவர்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க நின்று பட்டங்களை வழங்கினர். இது பட்டமளிப்பு வரலாற்றில் இடம் பிடித்துள்ள சிறப்பான நிகழ்வு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News