உள்ளூர் செய்திகள்
.

இருசக்கர வாகனத்தில் சேலை மாட்டி பெண் பலி

Update: 2022-05-16 10:51 GMT
இருக்கூர் அருகே இருசக்கர வாகனத்தில் சேலை மாட்டி தவறி கீழே விழுந்ததில் பெண் பலியானார்.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொள காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 

இவரது மனைவி லதா( 48). இவரும் அதே பகுதியை சேர்ந்த சித்ரா (40) என்பவரும் கால்நடைகளுக்கு போடுவதற்காக கரும்பு தோகை உறிப்பதற்காக இருகூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். 

அப்போது இருக்கூரில் உள்ள மாருதி பேப்பர் மில் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தை சித்ரா ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்திருந்த லதாவின் சேலை இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயரில் மாட்டி வாகனம் ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி சித்ரா முன்பக்கமாக தலைகுப்புற கீழே விழுந்ததில் அவருக்கு மூக்குத் தண்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

 பின்னால் உட்கார்ந்திருந்த லதாவுக்கு வலது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்கள் இருவரையும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பரமத்திபோலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News