உள்ளூர் செய்திகள்
.

முட்டை விலை 35 பைசா உயர்வு

Update: 2022-05-16 10:47 GMT
நாமக்கல்லில் முட்டை விலை 35 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.15 ஆக இருந்த முட்டை விலை, 35 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 

கடந்த 12-ம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. இதையடுத்து 14-ம் தேதி 25 பைசா உயர்த்தப்பட்டதால்  ரூ.4.15  ஆனது.

ஒரே வாரத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை என 3 முறை  முட்டை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.  இதனால்  6 நாட்களில் 3 முறை உயர்த்தப்பட்ட முட்டை விலை 85 பைசா  ஆகும்.   இதனால் 3.35 பைசாவாக இருந்த முட்டை விலை 4.50 காசுகளாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News