உள்ளூர் செய்திகள்
.

பிளஸ்-1 உயிரியல், தாவரவியல் உள்பட 11 பாடங்களுக்கு தேர்வு

Published On 2022-05-16 10:30 GMT   |   Update On 2022-05-16 10:30 GMT
சேலம், நாமக்கல்லில் இன்று பிளஸ்-1 உயிரியல், தாவரவியல் உள்பட 11 பாடங்களுக்கு மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
சேலம்:

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு  கடந்த  10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெறுகின்றன. 

இன்று (16-ந்தேதி) உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு இன்று 10.15 மணிக்கு தொடங்கியது. 

மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். அவ்வபோது தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்கு வந்து  மாணவ மாணவிகள் எழுதிய விடைத்தாள், வினாத்தாள், ஹால்டிக்கெட் ஆகியவற்றை வாங்கி அவற்றை பரிேசாதித்தனர். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) வேதியியல், கணக்குப்பதிவு, புவியியல் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
Tags:    

Similar News