உள்ளூர் செய்திகள்
.

பாப்பிரெட்டிப்பட்டியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-05-16 10:05 GMT
தருமபுரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சின்ன மஞ்சவாடியை சேர்ந்தவர் காமராஜ் (வயது30),  எலக்ட்ரீசியன். இவரது மனைவி தீபா (24).  இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் திருமணமானது. இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் காமராஜ் தீபாவை அவரது தாய் வீடான போதகாடு கரியதாதனூரில், நேற்று முன்தினம் விட்டு விட்டு வந்து விட்டார்.

இதில் மன வேதனையில் இருந்த தீபா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பையர்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் முருகன், பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீபாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அரூர்  சப்- கலெக்டர் முத்தையன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News